TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை கொரோனா பணியில் வீட்டிலிருந்தே பயன்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.








பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை கொரோனா பணியில் வீட்டிலிருந்தே  பயன்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
பெருந்தொற்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் தமிழக அரசினை பாராட்டுகிறோம். கொரோனா மின்னல் வேகத்தில் குறிப்பாக சென்னையில் 42 ஆயிரத்தைத் தாண்டி மக்களை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.  கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களை   கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று  கணக்கெடுப்பு பணியாக Street warrior பணியும் , மண்டல அலுவலகங்களில் செயல்படும் Tele counselling center. ல் தினம் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரை 2 லிருந்து இரவு 8 மணிவரை என்று சிப்ட் முறையில் ஆசிரியர்களை வரவழைப்பது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்ற சொல்வது பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

*பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாக முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள் என்றால் அதுமிகையாகாது.
*ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும்  அசாதாரணச் சூழலில்  ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை.*
*ஆனால் உதவிகல்வி அலுவலர்கள்  தலைமையாசிரியர்கள் மூலமாக ஆசிரியர்களின்             கட்டாயப்படுத்தி வரசொல்வது வருத்தத்திற்குரியதாகவும் மனஉளைச்சலையும் உண்டாக்கியுள்ளது.
*அதேவேளையில் ஆசிரியர்களின் உடல்நிலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 வயதிற்கு மேற்பட்டோர் சர்க்கரை,ரத்தஅழுத்தம்  போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரும்மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலஆசிரியர்கள் தங்களின் பாதுகாப்புக்கருதி சொந்தஊருக்கு சென்றுள்ளவர்களையும் கட்டாயப்படுத்தி  இப்பணியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.*
*மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை பயன்படுத்துவதுடன் நோய் தொற்று விரைந்துபரவும் நிலை உண்டாகும்.எனவேபேரிடர் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருந்துவருகிறார்கள்.தற்போது செய்யும் பணிகள் வீட்டிலிருந்தே செய்யக்கூடியது என்பதால் வீட்டிலிருந்து செயல்பட வாய்ப்பு வழங்கும் இல்லையேல் பணிசௌய்யும் பள்ளிகளிலே ஆலோசனை மையங்களாக மாற்றப்பட்டு தினந்தோறும் 30 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.*
*பி.கே.இளமாறன்*
*மாநிலத்தலைவர்*
*தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment