கொரோனா அல்லாத வேறு வகையான மருத்துவ காரணங்களுக்காக யாரேனும் விடுப்பு எடுத்திருந்தால் அதற்கான மருத்துவச் சான்றை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். கொரோனா அறிகுறி இருந்து விடுப்பில் இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு பகுதியில் வசித்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால் அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்படும். கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும். தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இது பொருந்தும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது
.