10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டில் குளறுபடி. மதிப்பெண் சான்றிதழ் ரத்துசெய்து கிரேடு முறையில் மாற்றுசன்றிதழ் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசிலிருந்து மாணவர்களை காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலனைருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிள் வேண்டுகோளினை ஏற்று 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்துசெய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கிய மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி மகிழ்கின்றோம்.மேலும் தேர்வு மதிப்பெண் கணக்கீடுசெய்வதில் சில தனியார்பள்ளி நிருவாகிகன் முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்திகள் வலம்வருவது வேதனையளிக்கிறது. மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் சிரமங்கள் உள்ளன. அரசுபள்ளிகளில் மிகத்துள்ளியமாக மதிப்பீடுசெய்தே மதிப்பெண் வழங்குவது வழக்கம்.மாணவர்க ள் மென்மேலும் முயற்சிக்க தூண்டும் வகையில் ஆயத்தப்படுத்துவோம் காலமாகவே காலாண்டுத் தேர்வு அமையும். படிப்படியாக முன்னேறி அதன்பிறகு மூன்றுதிருப்புத் தேர்வுகளையும் சிறப்பாக எழுதி அதுவும் அரசுத்தேர்வுபோலவே நடத்தப்பட்டு மதிப்பீடுசெய்ததில் அனைத்துமாணவர்களுமே தேர்ச்சி மட்டுமல்ல அதிகமதிப்பெண் பெறுவார்கள்.ஆனால் தற்போதைய முடிவு அந்த மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.எனவே அரையாண்டு மற்றும் மூன்று திருப்புதல் தேர்வுகளையும் சேர்த்து அதிக மதிப்பெண் பெற்ற இரண்டினை கணக்கீடுசெய்யவேண்டுகிறோம்.மேலும் வருகைப்பதிவு 20 விழுக்காடு அனைத்து மாணவர்களுக்கும் வழங்க ஆவனசெய்யவேண்டும்.நன்கு படிக்கும் மாணவன் கூட. குடும்பச்சூழல் , நோய் தொற்று ஆகியவற்றில் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்திருந்தால் அம்மாணவனின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. அனைவருக்கும் 20 விழுக்காடு மதிப்பெண் வழங்கவேண்டும்.மேலும், அரசுபள்ளிகளில் EMIS மூலமாக அனைத்து பதிவுகளும் ஏற்றப்பட்டுள்ளது. தனியார்பள்ளிகளில் EMIS மூலம் மதிப்பெண்கள் பதியபட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. மேலும் மதிப்பெண் எப்படி வரும் என்று மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.ஆகையால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ரத்துசெய்து மாற்றுச்சான்றிதழிலேயே கிரேடு முறை வழங்க ஆவனசெய்யலாம். இதன்மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நிரந்தரமாக ரத்துசெய்வதோடு பள்ளியிறுதி வகுப்பும் அடிப்படை கல்வித்தகுதியும் 12 ஆம் வகுப்பாக மாற்றலாம்.இதன் மூலம் அனைவரும் 12 ஆம் வகுப்புவரை படிப்பது உறுதிசெய்ய முடியும்.மேலும் 11 ஆம் வகுப்பிறகு பாடங்களை தேர்வுசெய்யும்போது பள்ளி அளவில் சிறு நுழைவுத்தேர்வு வைத்து தேர்வுசெய்யலாம். தற்போது தேர்வுக்காகவும், மதிப்பெண் பட்டியலுக்காகவும் வசூலிக்கப்பட்டத் தொகையினை கொரோனா தடுப்பு நிதியாக பயன் படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள்-பெற்றோர்களின் மனஉளைச்சலிலிருந்து விடுவிக்கும் பொருட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதை ரத்துசெய்து மாற்றுச்சான்றிதழில் கிரேடு வழங்க ஆவனசெய்யும்படி மதிப்புமிகு
முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment