தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
மாநிலச் செய்தி.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, நிருவாகிகள், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்,மாநில மகளிர் அணியினர் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 31 .7. 2022 அன்று காலை 11 மணிக்கு எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் மாநில தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தலைவருக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள் நாளை 16. 7. 2022 முதல் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு .க.ரமேஷ் அவர்களிடம் வேட்பு மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து 29 .7 .2022 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.
வேட்பு மனுக்களை நேரடியாக tnta இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் அவற்றை பூர்த்தி செய்தும் 29 .7 .2022 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
வேட்பு மனு வாபஸ் பெறுதல் 30. 7 .2022 மாநில தலைவர் தேர்தல் 31 .7.2022 முற்பகல் இணைப்பில் கண்ட தேர்ந்தெடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் எனவும் நண்பகல் 12:00 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்பதையும் அதில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.வெ. சரவணன்,மாநில பொதுச்செயலாளர்,த. ராமஜெயம் மாநில பொருளாளர்.மாநில அமைப்பு.
0 Comments:
Post a Comment