TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 6. பணியாளர் துறை. நாள். 22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்

 மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) - திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள  அரசாணை எண். 6.  பணியாளர் துறை. நாள். 22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்...

DOWNLOAD G.O

1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.


2.  "A" மற்றும் "B" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசுமருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.

3.  "C" மற்றும் "D" பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்)  மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்


4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.

5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment