ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60ஆக அதிகரிப்பு இளைஞர்களின்வே லைவாய்ப்பு கனவாகிப்போகும்.மறுபரிசீலனை செய்யத தமிழ்நாடுஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்,அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 59 லிருந்து 60 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்படு என்று சட்டசபையில் மாண்புமிகு.முதல்வர் அவர்கள் 110 விதியின்கீழ் அறிவிப்பு தமிழக அரசுப்பணியில் பணிபுரிந்துவரும் அலுவலர்கள், ஊழியர்கள்
அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருபுறம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 45 வயதுக்குபின்57 வயதுவரை பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியம் குறைவை ஈடுசெய்யலாம். ஆனால் பல லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் நிலையே நிலவிவருகிறது. மேலும் குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சுமார் 70,000 பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும் இன்னும் பல பிரச்சினைகளை சந்திப்பதோடு மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்.எதிர்கால கனவுகளையும் நசுக்கும் .தற்போது 5,300 ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 5300 பேர்கள் ஓய்வுப்பெறும் நிலையில் அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் 20லட்சம் முதல் 1 கோடி வரை பதவிக்கேற்ப வழங்கவேண்டியச் சூழலில் சுமார் 5000 கோடி வரை அரசுக்கு செலவாகும். ஆகையால், தமிழ்நாடு அரசு இந்நிலையினை மேற்கொண்டுள்ளது.ஆனால் நிதிநிலையினை காரணம்காட்டி ஆண்டுதோறும் அரசுஊழியர்களின் ஓய்வுப்பெறும் வயதினை உயர்த்துவது சரியான தீர்வாகாது.அரசு ஊழியர்களின் வயதுவரம்பினை தீர்க்கமாக 60 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி திறைவு எது முன்வருகிறதோ அதனை எடுத்துக்கொள்ளலாம்.இருப்பினும் காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கருதி தமிழக அரசுப்பணியாளர்களின் ஓய்வுவயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடள் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் *9884586716*
0 Comments:
Post a Comment