மேல்நிலைக்கல்வி பழையமுறையே தொடரும் -அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்க மேல்நிலைக்கல்வியில் நான்கு முதன்மை பாடங்களை மூன்று முதன்மை பாடங்களாகக் குறைத்து பல நெறிமுறைகள் வழங்கப்பட்டு அரசாணை 166/2019 வெளியிடபட்டு 2020-21 கல்வியாண்டில் அமுல்படுத்த இருந்தது. இது பதினோராம் வகுப்பிலேயே எதிர்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் தீர்மானிக்க வழிவகுத்தது.ஆனால் அந்த வயதில் உளவியல் அடிப்படையில் சாத்தியமாகாது என்று உளவியல் அறிஞர்களின் கருத்தாகும்.மேலும் பழைய பாடத்தில் கணிதபாடப்பிரிவை எடுத்தால் மருத்துவமும்,பொறியியல் படிப்பும் உயர்கல்வியில் தேர்வுசெய்யமுடியும். புதியமுறையில் ஏதேனும் ஒரு படிப்பு தேர்வுசெய்யும் வகையில் முதன்மை பாடங்கள் நெறிமுறைகள் வழங்கப்பட்டிருந்தது. இதனால் உயர்கல்வியில் பல வாய்ப்புகள் குறையும். இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாணவர்களின் நலன்கருதி அரசாணை 166 னை ரத்துசெய்து மேல்நிலைக்கல்விக்கு பழைய பாட நடைமுறையே தொடரும் என்று அறிவித்திருப்பது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. மேலும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சத்துணவிற்கான தொகையினை மாணவர்களின் வங்கிகணக்கில் செலுத்த உத்தரவிட்ட. மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
9884586716
0 Comments:
Post a Comment