TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட நிருவாகிகள் கூட்டம் இணையவழி மூலமாக 11.07.2020 காலை 11 மணிக்கு மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நடந்தது.பொருளாளர் ஜி.சாந்தி வரவேற்புரையுடன் தொடர்ந்து மாவட்ட,மாநில நிருவாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு 7 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.









தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட நிருவாகிகள் கூட்டம் இணையவழி மூலமாக 11.07.2020 காலை 11 மணிக்கு மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நடந்தது.பொருளாளர் ஜி.சாந்தி வரவேற்புரையுடன் தொடர்ந்து மாவட்ட,மாநில நிருவாகிகள் கருத்துகள் கேட்கப்பட்டு 7 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இறுதியில் பொதுச்செயலாளர் அ.அர்ஜூணன் நன்றி கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் கே.ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

1.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நேரிடையாக  சத்துணவுப்பொருள்களை வழங்கும் அரசின் முடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பாராட்டி மாண்புமிகு.முதல்வர்  அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

2.தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் செயல்முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

3.அசிரியர் - மாணவர் நேரடி கற்றல், கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும், மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த முடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு மூன்றாவது வாரத்தில் பள்ளி திறந்து சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம். உதாரணமாக உயர்நிலைப்பள்ளி எடுத்துக்கொண்டால் திங்கள்கிழமை 6ம் வகுப்பு, செவ்வாய்கிழமை 7ம் வகுப்பு புதன்கிழமை 8ம் வகுப்பு , வியாழக்கிழமை 9ம் வகுப்பு , வெள்ளிக்கிழமை 10ம் வகுப்பு என்பதால் உரிய சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்த இயலும். ஆசிரியர்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

4.அரசுப் பள்ளி மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தை தொடங்கி அதில் பெருநிறுவனங்கள், தன்னார்வதொண்டு நிறுவனங்களிடம் நிதி பெற்று அவற்றை அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும்.(லேப்டாப் வழங்குதல் உள்ளிட்ட ) அரசுப்பள்ளிகளுக்கு அளிக்கும் நிதி உதவிக்கு வருமானவரி கழிவு வழங்கவேண்டும்.

5.பேரிடர் காலத்தில் கல்விபணி பாதிக்காமல் இருக்க  மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதர ஆவனசெய்யவும்.

6. பெருந்தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு மட்டும் 40 %  பாடத்திட்டம் குறைக்க ஆவனசெய்யவும்

7. பதினோராம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்க ஆவனசெய்யவும் .
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில,மாவட்ட நிருவாகிகள் இணையவழி கூட்டத்தில் மேற்கண்ட 7  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.தீர்மானங்களை தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆவனசெய்யவேண்டி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment