தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.அருள் சங்கு பொதுச்செயலாளர் வெ சரவணன் பொருளாளர் த ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் சார்பில் சென்னை பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண் மேல் பெற்ற 50 மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக அகில இந்திய அளவில் கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து மாநகராட்சியின் செலவில் அழைத்துச் சென்றுள்ள மாநகர மேயர் , ஆணையர்,துணை ஆணையர்( கல்வி) மற்றும் கல்வி அலுவலர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவுசார்ந்த முன்னேற்றத்தை கரத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டுமாய் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment