தேர்வுகள் – தனிகவனம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை 10.03.2022 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-யினை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ள அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை / பாதுகாவலர், புகைப்படம்) அத்திருத்தங்களை 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் பள்ளி அளவிலேயே மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் இராணிப்பேட்டை
0 Comments:
Post a Comment