திருப்புதல் தேர்வு பொதுதேர்வுக்கு தயார்படுத்துதல். முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்து அரசே ஏற்றுக்கொள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்
~~~~~
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத தயார் செய்யும் பொருட்டு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து மாநிலம் முழுதும் ஒரே மாதிரி கேள்வித்தாள் தயாரித்து பொதுத்தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கிறேன்.பிப்ரவரி 9ம் தேதி முதல் நடந்தது இன்றுடன் முடிவடைகின்றது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தொடங்கியதிலிருந்து பொதுத்தேர்வுக்கு இந்த மதிப்பெண்கள் தான் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.ஏனேனில் இதுவரை திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் அந்தந்த மாவட்டங்கள் தயாரித்துக்கொள்ளும் இம்முறை பொதுத்தேர்வு போன்றே பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வழங்கியது.ஆனால் இணையவழி மூலமாகத்தான் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில தனியர் பள்ளி நிருவாகம் முறைகேடு செய்து பாடத்திற்கான வினாத்தாள்களும் முந்தின நாளே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, வினாத்தாள் எங்கு வெளியானது என விசாரனை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் போளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் வெளியானதாக தெரியவந்தது, இது முழுக்க முழுக்க தனியார் பள்ளியின் தவறாகும் , இந்த நிலையில் தான் தனியார் பள்ளிகள் மாணவர்களை தயார் படுத்துகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது , ஒரு சிலரின் தவறால் மற்ற பள்ளிகள் மட்டுமின்றி மாணவர்களையும் பாதிக்கிறது.ஆகையால் தவறும் செய்யும் தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்து அப்பள்ளியினை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ,
மேலும் தனியார் பள்ளியில் தவறுக்கு திருவண்ணாமலைமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை வருத்தமளிக்கின்றது.
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஆகிவிட்டது. எனவே முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அதே மாவட்டத்தில் பணியமர்த்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்
*பி.கே.இளமாறன்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment