பெறுநர்
மதிப்புமிகு தேர்தல் ஆணையர் அவர்கள்
மாநிலத்தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு.
மதிப்புமிகு ஐயா
வணக்கம்
10,12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு 9 ந்தேதி தொடங்கவுள்ளதால்
நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பயிற்சி வகுப்பினை ஒருநாள் முன்பாக நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கியதன் அடிப்படையில் பிப்ரவரி முதல் தேதியில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரிடை பயிற்சி தொடங்கியுள்ளது. தற்போது நகர்புற உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அதன் பணிகள் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு 31.01.2022 நடந்து முடிந்துள்ளது.ஆசிரியர்களும் அரசூழியர்களும் தேர்தல் பணி ஜனநாயகக்கடமை உணர்ந்து பணிபுரிய தயராகிவருகின்றோம்.
அடுத்தடுத்து பயிற்சிகள் 09.02.2022 மற்றும் 18.02.2022 என்று மூன்று கட்டப்பயிற்சி வகுப்புகளுக்கு அட்டவணை அறிவித்துள்ளார்கள்.இந்நிலையில் வரும் பிப்ரவரி 9 ந்தேதி பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ந்தேதியன்று ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டால் பள்ளியில் தேர்வு நடத்த இயலாத சூழல் ஏற்படும்.எனவே 9 ந்தேதி நடைபெறவுள்ள தேர்தல் பயிற்சி வகுப்பினை 9 ந்தேதிக்கு முன்பாக நடத்த ஆவனசெய்யும்படி மாநிலத்தேர்தல் ஆணையத்தை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் அரசூழியர்கள் தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 19 ந்தேதி நடைபெறும் தேர்தலுக்கு முந்தையநாளே(18.02.2022) வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மறுநாள் இரவு தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகளை அனுப்பிவைக்கும் வரை பணி என்பதாலும் தேர்தல் நடைபெறும் நாளன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாத பணியென்பதால் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல்ஆணையமே
உணவு எற்பாடு செய்துதரும்படி மாநிலத்தேர்தல் ஆணையர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
0 Comments:
Post a Comment