கற்றல் முடக்கம் -பாதிப்பு
1 முதல் 8 வகுப்புகளுக்கும் பாதுகாப்பு கருதி நுண்ணிலை முறையில் நேரடி வகுப்புகள் நடத்திட அரசு ஆவனசெய்யவேண்டும்.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர்
*பி.கே.இளமாறன்*
வேண்டுகோள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் இருந்ததை தற்போது தான் நேரடி வகுப்புகள் மூலம் சரிசெய்துவருகின்றோம்.மேலும் அரசின் தொலைநோக்கு திட்டமான மாணவர்களின் நலன்கருதி இல்லம்தேடி கல்வி மூலம் கல்வி மீட்டெடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா மிரட்டிவருகிறது.இந்நிலையில் நேரடி வகுப்புகள் ரத்து என்பது பேரிடையாக உள்ளது. ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப்புரிவார்கள். ஆகையால், பயனுள்ளதாக மாற்றும் வகையில் கல்வித்தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகவே இருந்துவருவதால் முழுமையாகப் பயன்தராது. குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளதை அறியமுடிகின்றது. எனவே முற்றிலுமாக கொரோனா தொற்று குறையாதக் காரணத்தினால் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை நடைமுறையில் இருப்பதுபோன்றும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையிலும் நுண்ணிலை முறை வகுப்புகள் மூலம் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவனச் செய்ய வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு வகுப்புகள் என்று நுண்ணிலை முறையில் 5 மாணவர்கள் முதல் 10 மாணவர்களை கொண்டு பாடம் நடத்தலாம். மேலும் பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும்.மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்துவருவதால் முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்துமாத்திரைகள் வழங்கிடவேண்டும். தற்போதையச்சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன்கருதி நுண்ணிலை வகுப்புகள் நடத்த ஆவனச்செய்ய வேண்டியும்,பேரிடர் நோய்தொற்று ஆலோசனைக்கூட்டத்தில் பள்ளிகளும் தொடர்புடையதால் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ளவும் ஆவனசெய்யும்படி
மாண்புமிகு. முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment