பண்டிகை காலங்களில் மட்டுமே சொந்தஊருக்கு செல்லும் நிலை என்பதால் அரையாண்டு விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லையென்றாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பல்வேறு பணிகள் மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே.ஆனாலும் பள்ளிகள் திறந்தபிறகு சனிக்கிழமை உள்ளிட்ட ஆறுநாட்கள் வேலைநாள்கள் பணிபுரிந்துவருகின்றோம்.கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாததால் இரண்டு ஆண்டுகள் குடும்ப உறவுகளோடு ஒரு இடைவெளி உண்டானதுபோல மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில்தான் குடும்பங்களோடு வாழும் சூழல் உருவாகும் பெரும்பாலானஆசிரியர்கள் 200,300 கிலோ மீட்டர் தொலைவுகளில் பணிபுரிந்துவருகிறார்கள். உடலும் உள்ளமும் ஒருசேர இருந்தால் மட்டுமே கற்பித்தல் பணி சிறப்பாக அமையும்.
தற்போது கிறிஸ்துமஸ் அரையாண்டு விடுமுறை உண்டா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களும் பலநாள்கள் வீட்டிலே இருந்தாலும் அரையாண்டு தேர்வு நடந்தாலும் நடக்காவிட்டாலும் குறிப்பாக பண்டிகைகாலங்களில் விடுமுறையை எதிர்பார்த்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு விடுபட்டுபோன கல்வி இடைவெளியினை முழுமையாகப் பூர்த்திசெய்யும் விதத்தில்அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் முழுஈடுபாட்டுடன் ஈடுபட்டு ஆசிரியர்கள் செய்துவருகிறார்கள்.
அதேநேரத்தில் சொந்த குடும்பம்-குழந்தைகளுடன் இருக்கின்ற காலமே எங்களுக்கு இதுபோன்ற பண்டிகை காலம் மட்டுமே என்பதால்இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் -அரையாண்டு விடுமுறை வழங்கி உதவும்படி மாண்புமிகு முதலமைச்சர் அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment