பள்ளிகள் முழுமையாக திறக்கும்நாளே புத்தாண்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில் “நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
*மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்” -வார்த்தைகளோடு முதலமைச்சர் நிறுத்திக்கொள்ளாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 19 மாதங்களாக கற்றலில் ஏற்பட்ட முடக்கத்தினை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி "இல்லம் தேடி கல்வி" திட்டம் மூலம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*மேலும் தமிழ்நாடு நாள் உருவான நாளன்று நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நிருவாகிகள், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்கவேண்டுகிறேன்.
பள்ளிக்கு வந்ததும் குழந்தைகளின் மனநிலையை அறிந்து வீட்டுச்சூழல் போன்றே மகிழ்ச்சி ஏற்படுத்தித்தரவேண்டும்.
ஆசிரியர்-மாணவர்களின் உறவு தாய்-மகன் உறவுபோன்று தாய்மையுணர்வை குழந்தைகள் மனதில் எழவேண்டும்.
பள்ளிதான் மிகுந்த பாதுகாப்பு என்பதை குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து கற்றல் சூழலை உருவாக்கவேண்டும்.
பள்ளிகள் திறக்கும்நாளே நமக்கு புத்தாண்டாகும். அதனை மாணவர்களும் உணரும்வகையில் நம் செயல்பாடுகள் இருக்கவேண்டும்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment