ஆசிரியர் பணிநியமனம் வயதுவரம்பை ரத்துசெய்த மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி
மாநிலத்தலைவர்
*பி.கே.இளமாறன்*
*அறிக்கை* .
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாகமாற்றி மகிழ்ச்சி பகிர்வதற்குள் கடந்த ஆட்சிகாலத்தில் பணிநியமனத்திற்கு வயது வரம்பு குறைக்கப்பட்டதால்
ஆசிரியர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தார்கள்.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து ஆசிரியர்களின் பணிநியமன வயதினை உயர்த்துவதற்கு வலியுறுத்தி வந்தது.இந்நிலையில் மாண்புமிகு. முதல்வர் #mkstalin #AnbilMaheshPoyyamozhi அவர்கள் கோரிக்கையினை ஏற்று வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 ஆகவும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 ஆக உயர்த்தி ஆசிரியர் பணிநாடுநர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது தேர்வுவாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கும் இந்த அரசாணை பொருந்தும் என்ற அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இந் ஆட்சி ஆசிரியர்களின் பாதுகாவலராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரை மீண்டும் நினைவுபடுத்துகிறது. மேலும் இடைநிலை ஆசிரியர் பட்டதாரிஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றும் மேலும் ஒரு சிறப்பு தேர்வு எழுதவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முரணாணது.ஆசிரியர் பணி நியமனத்தில் கடந்த ஆட்சிகாலத்தில் கடைப்பிடிக்கபட்ட முரண்பாட்டை களைந்து இந்த கல்வியாண்டில் 5 லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதால் ஏற்கனவே தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று காத்திருக்கும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு . படிபடியாக ஆசிரியர் பணி வழங்க
ஆவனச்செய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment