TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிக்கல்வித்துறைஊழலற்ற நிருவாகமாக மாற்றும் *மாண்புமிகு* . *முதல்வர்* அவர்களுக்கு நன்றி ஆசிரியர்கள் இடமாறுதல் பூஜ்யம் கலந்தாய்வு. இன்னும் அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்கப்படாத நிலையில் இதுவரை கலந்தாய்வு மூலம் கல்லாக்கட்டியச் சிலரின் அலறல். ஆசிாியா் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடா்பாக பல்வேறு *பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆசிரியர்களை குழப்பிவருகிறார்கள்* .

 பள்ளிக்கல்வித்துறைஊழலற்ற நிருவாகமாக மாற்றும் *மாண்புமிகு* . *முதல்வர்* அவர்களுக்கு நன்றி

ஆசிரியர்கள் இடமாறுதல் பூஜ்யம் கலந்தாய்வு.

இன்னும் அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்கப்படாத நிலையில் இதுவரை கலந்தாய்வு மூலம் கல்லாக்கட்டியச் சிலரின் அலறல்.

ஆசிாியா் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடா்பாக பல்வேறு *பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆசிரியர்களை குழப்பிவருகிறார்கள்* .💐💐💐💐

 இந்த ஆண்டு கட்டாயம் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் *கல்வித்துறையிடம் தொடா்ந்து நாம் வலியுறுத்தி வந்தோம் .

அதில் பூஜ்ய காலியிட கலந்தாய்வு என்ற யுக்தி மாண்புமிகு.முதல்வர்,கல்வி அமைச்சா், துறையின் உயா் அலுவலா்கள் எடுத்த முடிவு.நேர்மையான நிருவாகத்தினை வரவேற்கிறோம்... காரணம், ஆசிாியா்களிடம்  நிா்வாக பணிமாறுதல் என்ற பெயரில் வேறு எந்த துறையிலும் இல்லாத அளவில் அரசியல்,பணம் ஆகியவை கல்வித்துறையினை ஆட்டிபடைத்து வந்தது.தற்போது  நேர்மையான அரசின் கொள்கையினை ஆசிாியா்களாகிய நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும்... 

பணம் பெற்று நிா்வாக மாறுதல் வழங்கும் நடைமுறையை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து,கண்டித்து  மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார். இன்று வெளிப்படையான கலந்தாய்வை நடத்த உத்தரவிட்டுள்ளதை வரவேற்காமல் சிலர் சங்கத்தலைவர் என்றபெயரில் பள்ளிக்கூடம்  செல்லாமல் அரசியல் பின்புலம்போல காட்டிக்கொள்பவர்கள் எதிர்ப்பதன் உள்நோக்கத்தினை நீங்கள் புாிந்துகொள்ளவேண்டும் ... 

 *கலந்தாய்வு நடத்தப்படுவது மட்டுமே உறுதி....* 

கலந்தாய்வு நெறிமுறை தொடா்பாக வெளிவரும் அனைத்து செய்திகளும் வதந்திகளே... இன்னும் சொல்லபோனால் வேறு மாநிலத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை வேண்டுமென்றே இங்கு வெளியிட்டு திட்டமிட்டு  குழப்பி வருகிறார்கள்.

அரசாணை வெளிவரும் வரை எவருக்கும் தொிய வாய்ப்பே இல்லாத

 அளவிற்கு  நிா்வாகம் நோ்மையாக நடக்கிறது.

.இயக்குநர் மூலம் சிலபல வேலைகளை செய்துவந்தவர்கள் இயக்குநர் பதவி இல்லையென்றதும் ஆசிரியர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாக துள்ளிக்குதிக்கிறார்கள்.கால் நூற்றாண்டுகளாக எந்த ஆசிரியர் இயக்குநர் பதவிக்கு வந்துள்ளார். ?

38 மாவட்டத்தில் CEO வாக இருப்பது 6 பேர் தான் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  *ஊழலற்ற கலந்தாய்வு நம் "தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்" நிலைப்பாடு* 

    ஆனால் ஒரு சிலர் அரசியல் சாயம் பூசிக்கொண்டு ஆசிரியர்களை குழப்பிவருகிறார்கள்.

உண்மை வெளிச்சத்திற்குவரும்.  நீண்டகாலத்திற்கு பிறகு *பள்ளிக்கல்வித்துறை* *தூய்மைப்படுத்தப்படுகிறது.நேர்மையான ஆசிரியர்களாகிய நாம் வரவேற்போம்* .

பூஜ்யம் கலந்தாய்வு

 *எந்த ஆசிரியர்களையும் பாதிக்காது.* மாறாக இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

முறைகேடுகள் இல்லாத பணம் அரசியலுக்கு அப்பால்  நடக்கும் நேர்மையான கலந்தாய்வை வரவேற்போம்.

நன்றியுடன்

 *பி.கே.இளமாறன்*

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

1 Comments: