தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஜனவரி தொடக்கத்திலே அறிவிப்பது வழக்கம்.பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அறிவிப்பு எப்போதுவரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம் தமிழர்த்திருநாளினை மகிழ்ச்சியோடு கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பங்களில் தைத்திருநாளாம் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் போனஸ் உடனே வழங்கிட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment