TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

மாநிலப் பாடத் திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள்: பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை
சென்னை: மாநிலப் பாடத் திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு என்பது கிராமப்புற மாணவா்களைப் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனா். குழந்தைகளைப் பள்ளிகளுக்கு வரவழைப்பதற்கே பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில் பொதுத் தோ்வு என்றால் அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இது மாணவா்களிடம் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். பொதுத்தோ்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்குச் சென்று எழுதச் சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகளின் நலன்கருதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுத்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வினை படிக்கும் பள்ளியிலேயே எழுத ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்

Read news from dinamani 
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment