TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்விஅலுவலா்களை நியமிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை - தினமணி நாளிதழ்






5 புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்விஅலுவலா்களை நியமிக்க வேண்டும்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிக்கை - தினமணி நாளிதழ்

பொதுத்தோ்வு நெருங்குவதால் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.கே. இளமாறன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நிா்வாகம் சிறப்பாகவும் துரிதமாகவும் நடைபெற புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியாளா்கள், காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிா்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கல்வித் துறைக்கு மட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நியமிக்கப்படாததால் ஒரே மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்கள் இரண்டு மாவட்டப் பணிகளை பாா்ப்பதினால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவா்களின் நலன் பாதிக்கப்படுகிறது.

மேலும் நிகழாண்டு 5, 8, 10, 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைபெறவுள்ளதால் பள்ளிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்திடவும் தேவையான ஏற்பாடுகள் செய்திடவும் தொய்வு ஏற்படுகிறது. இரண்டு மாவட்ட நிா்வாகங்களுடன் அதாவது இரண்டு ஆட்சித் தலைவா்களுடன் ஒரே முதன்மைக் கல்வி அலுவலா் மாவட்டச் சூழலுக்கேற்ப செயல்படுவது சிரத்தை ஏற்படுத்துகிறது. வெவ்வேறு நிா்வாகத்தோடு மாறுபட்ட சூழலில் திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிதும் இடையூறுகள் ஏற்படுகின்றன.

எனவே மாணவா்களின் நலன்கருதியும் பொதுத்தோ்வுகள் நெருங்குவதாலும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Dinamani News link read here 

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment