முதுகெலும்புக்கு ஆபத்து முப்பருவத்தேர்வு முறை ரத்தினை திரும்ப பெறுக.
தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
குழந்தைகளின் உடல்நலமும் மனநலமும் கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பாடச்சுமையினைக்குறைத்து பாடங்களைப் பிரித்து முப்பருவத் தேர்வு முறையினை 2012-2013 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகிறது.
தற்போது குழந்தை மற்றும் இலவசக்கல்வி உரிமைச்சட்டம் 2019 ல் திருத்தியதின் அடிப்படையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை அறிவித்து பிஞ்சுகளின் நெஞ்சில் வன்முறையினை ஏவிவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆர்வத்தோடு படிப்பதை அறவே ஒழித்து அடிமைப்படுத்தும் நோக்கில் திணிக்கப்பட்டுள்ளது பொதுத்தேர்வு முறை எனலாம்.அதனை தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டில் முப்பருவத்தேர்வு முறையினை ஒழித்து ஒரே பருவமாக பொதுத்தேர்வு நடத்திடும் நடவடிக்கையாக ஒரே புத்தகமாக மாற்றிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
குழந்தைகளின் மன உளவியல் அறிஞர்களின் ஆலோசனைகளின்படியே அன்றையை முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளை மையப்படுத்தி புத்தகம் தயாரித்து புத்தகச்சுமையோடு மனச்சுமையும் குறைத்தார்கள். மேலும் புத்தகத்தின் அதிகச்சுமை தாங்கமுடியாததால் இளம்வயதிலேயே கூன் விழுந்திடுவதோடு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை முப்பருவத்தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கல்விக்கொள்கை இன்னும் மத்திய அரசு அமுல்படுத்துவதற்கு முன்பே அவசர அவசரமாக தமிழக அரசு ஆணைப் பிறப்பிப்பது வெந்தப்புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது.மத்திய அரசின் தேசியக்கல்விக்கொள்கையில் திருத்தம் வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைக்கப்பட்டு இன்னும் மத்திய அரசின் முடிவு வெளிவராதது குறிப்பிடத்தக்கது. எனவே மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் மனநலம் உடல்நலம் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையிலிருக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முப்பருவ முறையே தொடர்ந்திடவும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினால் பயமும் அச்சமும் ஏற்படுத்தியுள்ள கிராமப்புற மாணவர்களின் நலன்கருதி பொதுத்தேர்வினையும் ரத்துசெய்திட. ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

0 Comments:
Post a Comment