விதி எண் 110 இன் கீழ் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு செய்ய வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க அருள் சங்கு மாநில பொதுச் செயலாளர் வெ.சரவணன் மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறி இருப்பதாவது :
தமிழ்நாடு அரசானது 2025- 26 ஆம் நிதியாண்டில் எந்த துறைக்கும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்வித்துறைக்கு 46, 767 கோடியையும் காலை உணவு விரிவாக்க திட்டத்திற்கு 600 கோடியையும் முதுகலை ஆசிரியர்கள் 1721 பேரும் பட்டதாரி ஆசிரியர்கள் 841 பேரும் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடிய அறிவிப்புகள் என்றாலும் கூட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதியாக கொடுத்த வாக்குறுதி எண் :309 புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மற்றும் வாக்குறுதி எண்: 181 இல் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் கழக ஆட்சி அமைந்த உடன் முறையான பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை அதேபோல அறிஞர் அண்ணா காலம் தொட்டு பெற்று பெற்று வந்த ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஒரே அறிவிப்பாக 1.4. 2026 முதல் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுகொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு தனது அலுவலர்களுக்கு ஏழாவது ஊதிய குழு நிர்ணயத்தில் விடுபட்ட 21 மாத கால நிலுவ தொகையும் வழங்காமல் உள்ளது இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையில் ஏதும் இடம் பெற பெறவில்லை இது அரசு உயர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மக்களில் ஒருவர் தானே ..ஆகவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பழைய ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் 1.4 2025 முதல் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் பழைய நிலையிலேயே ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 21வது கால ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் விதி எண் 110 இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment