அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன் ,மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டு இருப்பதாவது
மத்திய அரசு தனது பணியாளர்களுக்கு அகவிலைப்படையை இரண்டு சதவீதம் உயர்த்தி 53 %இல் இருந்து 55% ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது 1.1. 2025 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை கருத்தில் கொண்டு தமிழக அரசின் நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள்,ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்ப ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் தொகுப்பூதிய பணியாளர்கள் ,மதிப்பூதிய பணியாளர்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் ஆகிய 16 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி 53 சதவீதத்திலிருந்து இருந்து 55 சதவீதமாக உயர்த்தி 1.1. 2025 முதல் வழங்குமாறு பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment