தமிழ்நாட்டிற்கு சமக்கிர சிக்ஷா திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடி நிதியை உடனடியாக தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச் செயலாளர் வெ. சரவணன் ,மாநில பொருளாளர் த. ராமஜெயம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
கடந்த 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் ஸ்கூல் ஆஃப் ரைசிங் இந்தியா என்ற பி. எம் .ஶ்ரீ பள்ளிகளை தொடங்க தமிழக அரசு முன்வந்தால் மட்டுமே சமக்கிர சிக்ஷா திட்டத்திற்கு நிதியை ஒதுக்க முடியும் எனக் கூறி ரூபாய் 2152 கோடியை மத்திய அரசு வழங்காமல் தமிழ்நாட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவருக்கும் தொடர்ந்து நெருக்கடியை மத்திய அரசு அளித்து வருகிறது.பி எம் ஶ்ரீ பள்ளிகள் ,ஆய்வகங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை அறை ,நவீன உள்கட்டமைப்பு நீர் பாதுகாப்பு, இயற்கை வாழ்க்கை முறை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பசுமை பள்ளிகளாக விளங்கும் என்றும் விளையாட்டுகள் அடிப்படையான கல்வி ,கேள்வி கேட்கும் முறை கண்டுபிடிப்பு சார்ந்த முறை திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறி புதிய கல்வி கொள்கை திட்டத்தினை தமிழ்நாடு ஏற்க வேண்டுமென வற்புறுத்தி வருகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறது ..மற்ற எல்லா துறைகளை காட்டிலும் கல்வித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.. புதிய கல்விக் கொள்கையானது வேத கலாச்சாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார் ..அவர் தமிழ்நாட்டிற்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. தமிழ்நாட்டிற்கான புதிய மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டு குழுவின் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டிற்கு மும் மொழிக் கொள்கை"அவசியமில்லை.. ஆகவே மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டி அக்டோபர் 2024 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்டோபர் 2024 இல் அனைத்து கட்சி முக்கிய தலைவர்களையும் அழைத்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் எம்.பி,திரு. தங்கபாலு ,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல் .திருமாவளவன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு.கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு. முத்தரசன் தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு.ஆர் எஸ். பாரதி ஆகியோர் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் பங்கேற்று வலியுறுத்தியும் இன்றளவும் மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக 2152 கோடியை மத்திய அரசானது தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டும் இல்லை என்றால் அனைத்து ஆசிரியர் சங்கங்களுடன்" இணைந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் நிதியை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து வலியுறுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாளிதழ் செய்திகள்
0 Comments:
Post a Comment