தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் க. அருள் சங்கு பொதுச்செயலாளர் வெ. சரவணன் மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் மாணவர் நலன்கருதி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள்
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பூதியம் என்ற அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஜூலை 2022 முதல் சம்பளம் கிடைக்கப்பெறாமல் உள்ளது .அவர்களுக்கு உரிய மதிப்பூதியம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.
0 Comments:
Post a Comment