TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும்” பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

 “மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும்” பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் .இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:





“கடந்த அதிமுக ஆட்சியின்போது 2021- 22 இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில் அன்றைய முதலமைச்சர் விதி 110ன் கீழ் 25.2.2021 அன்று அறிவிப்பு ஒன்றைச் செய்தார். அதன் மூலம் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை அதே நாளிலேயே வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூடுதலாக ஒரு ஆண்டு பணிபுரிந்து 60 வயதில் ஓய்வு பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த வாய்ப்பு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஒழுங்கு விதிகள் ( Code of Regulations for Matriculation Schools, Tamil Nadu ) விதி 18 இன் கீழ் அவர்களுடைய ஓய்வு பெறும் வயது 60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட 58 வயதிலேயே அவர்கள் ஓய்வுபெறச் செய்யப்படுகிறார்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்கள்,அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும் நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கு அது மறுக்கப்படுவதால் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை G.O. ( Ms) No.29 நாள் 25.02.2021 மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று ஒரு ஆணையை வெளியிட்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு உதவவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். “
இவ்வாறு ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment