TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் செப் .1 ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 DOWNLOAD


தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புக்கு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
* ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
* மருத்துவத்துறை துணை இயக்குநர்கள் பள்ளிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
* பள்ளிகளில் கை கழுவுவதற்கு கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளிகளை திறப்பதற்கு முன்பே வளாகங்களை சுத்தப்படுத்தி இருக்க வேண்டும்.
* பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
* மாணவர்கள் 6 அடி இடைவெளியில் அமர்ந்து இருக்குமாறு இருக்கைகள் அமைக்க வேண்டும்.
* கொரோனா நோய் அறிகுறி உள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது.
* தகுதி உடைய மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.
* மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment