TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிக்கல்வி 2012-2013-ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மே 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization)

 



DOWNLOAD

பள்ளிக் கல்வி (..4(1))த் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9


கடித ண்.9226/..410/2021-1, நாள் 31.05.2021 


அனுப்புநர் திருமதி.காகர்லா உஷா , ...

அரசு முதன்மைச் செயலாளர்

31 MAY 2021 

சென்னை  -6

பெறுநர் முதன்மைச் செயலாளர்/கருவூல கணக்கு ஆணையர், சென்னை -35. அனைத்து மாவட்டக் கருவூல அலுவலர்கள்/ சார்நிலைக் கருவூல அலுவலர்கள் 

சார்நிலைக் கருவூலம், கருவூல கணக்கு ஆணையர் மாநில கணக்காயர், சென்னை -18

ஐயா / அம்மையீர்

பொருள் 

பார்வை 

பள்ளிக்கல்வி-2012-2013-ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மே 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குதல் சார்ந்து . 1. அரசாணை (நிலை) எண்.277, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 

30.10.2012. 2. அரசாணை (நிலை) எண்.62, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 

16.05.2014. 3. அரசாணை (1டி)எண்.373, பள்ளிக் கல்வித் ..4(1) துறை, நாள் 17.05.2018. 4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ..எண்.006743/எல்/இ3/2021

நாள் 05.05.2021 

மேலே ஒன்றில் காணும் அரசாணையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் 2012-13-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டவாறு ஏற்கனவே இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகளுக்கென ரூ.4800-10000 + தரஊதியம் ரூ.1300/- என்ற ஊதிய விகிதத்தில் 4393 ஆய்வக உடனாள் பணியிடங்கள் மற்றும் ரூ.5200-20200 + தரஊதியம் ரூ.2400/- என்ற ஊதிய விகிதத்தில் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களை அவை நிரப்பப்படும் நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.277, பள்ளிக் கல்வி (அகஇ) துறை, நாள் 30.10.2012ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது

2. மேற்படி அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட ஆய்வக உடனாள் என்ற பணியிடத்தை ஆய்வக உதவியாளர் பணியிடமாக திருத்தம் செய்து ரூ.5200-20200 தரஊதியம் ரூ.2400/- என்ற ஊதிய விகித்தில் நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்.62, பள்ளிக் கல்வி (அகஇ) துறை, நாள் 16.05.2014ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு கடைசியாக 19.02.2018 முதல் 18.02.2021 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை (1டி) எண்.373, பள்ளிக் கல்வி (..4(1))த் துறை நாள் 17.05.2018-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது

3. தற்போது மேற்காணும் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் 18.02.2021 உடன் முடிவடைந்துள்ள நிலையில் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6157 பணியிடங்களுக்கு 19.02.2021 முதல் 18.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இப்பணியிடங்களுக்கு மே 2021-ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

4. பார்வை 1-இல் காணும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 19.02.2021 முதல் 18.02.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் இப்பணியிடங்களுக்கு மே 2021-ம் மாதம் ஊதிம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்படி பணியாளர்களது சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதிய பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், மே 2021-ஆம் மாதத்திற்கான ஊதியப்பட்டிகளை அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் அதனை ஏற்று 

சம்பளம் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

தங்கள் நம்பிக்கையுள்ள 

(அரசு சார்புச் செயலாளர்) அரசு முதன்மைச் செயலாளருக்காக


Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment