TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 





(நிகழ்வு சுருக்கம் தமி்ழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டத் தலைவா் கவிஞர். எஸ்ஏ. முத்துபாரதி)


தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநிலம் தழுவிய அமைப்பான தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்திற்கு அமைப்பின் தலைவர் திரு. பி.கே. இளமாறன் மற்றும் உள்ள பொறுப்பாளர்கள் கிளை அமைப்புகளை சரியாக வழிநடத்தி வருகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலில் திருப்பூரின் முதல் நிகழ்ச்சியாக அதுவும் கொரோனாவிற்குப் பிந்தைய முதல் நிகழ்வாக உலக மகளிர்தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி உதவினார்கள்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய பெருமை கலந்து கொண்ட பெண்ணினத்திற்கே முழுமையாகச் சாரும்.
இன்று காலை திருப்பூர் கருவம்பாளையம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளை பட்டிமன்ற நடுவர் முனைவர். ம. இராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு தொழிலதிபர், ஜேசீஸ் திருப்பூர் ஸ்மைல்ஸ் பிரிவின் திருமதி. ஆர். சாந்திதேவி தலைமை வகித்தார். கல்வியாளர், அமைப்பின் கௌரவ ஆலோசகர் முனைவர் ப. ரங்கசாமி அவா்கள், அருள்நிதி. அருணாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
அமைப்பின் தலைவா் கவிஞர். எஸ்ஏ. முத்துபாரதி அவா்கள் தமிழ்நாடு தமிழ்ச்சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பின் நோக்கங்கள் செயல்பாடுகளை விளக்கி, வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாணவர்கள் செல்வி பாவனா, செல்வி ஓவியா , செல்வி பூமிகா தேவி ( தேவா மெட்ரிக் பள்ளி) உள்ளிட்டோர் திருக்குறள் இசைப்பாடல் வழங்கினர்.
இலக்கிய அன்பர்கள் திரு. குமாரசாமி, திரு. நாராயணசாமி, திரு. நீரணி பவளக்குன்றன், திரு. அவிநாசிலிங்கம் ஆகியோர் இலக்கிய நயம்பட திருவருட்பா, திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றிலிருந்து கருத்துரை வழங்கினர்.
கவிஞர். எஸ்ஏ. முத்துபாரதி அவா்கள் எழுதிய பயண அனுபவ நூல் “ஒட்டக சவாரி“ நூலினை ஜேசீஸ் ஆர். சாந்திதேவி அவர்கள் வெளியிட திருமதி. சிவானந்தம், முனைவர். ம. இராஜலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனா்.
பின்னர் மகளிா் தின சிறப்பு பட்டிமன்றம் “பெண்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது - பிறந்த வீடா? புகுந்த வீடா? என்கிற தலைப்பில் நடைபெற்றது.
நடுவராக முனைவர் ம. இராஜலட்சுமி அவா்களும்
பிறந்த வீடு அணியில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி நூலகர் திருமதி. ஜெயபாரதி , அதே கல்லூரியின் மாணவிகள் கோ. ஸ்ரீதரண்யா, சு. சக்தி பிரியா ஆகியோரும் பேசினார்கள்.
புகுந்த வீடு என்கிற அணியில் தேவா மெட்ரிக் பள்ளியின் தமிழாசிரியை திருமதி. மனோரஞ்சித மலர், செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகள் க. மகாலட்சுமி, வ.சு. ஷெரின் மேஹா ஆகியோர் பேசினார்கள்.
சுவாரசியமாக பட்டிமன்ற விவாதங்கள் நடைபெற்றன. பேசும் கருத்துகள் யதார்த்தமாக இருக்க வேண்டுமென பட்டிமன்ற மாதிரி அமர்வுகூட நடத்தாமல் அனைத்து மாணவிகளும் இயல்பாக ( சிலர் முதன்முறை என்றனர்) பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றனா். பிறந்த வீடு அணியை திருப்பூர் காங்கயம் சாலை செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியின் நூலகர் திருமதி. ஜெயபாரதி அவா்கள் தலைமையில் மாணவர்கள் கோ. ஸ்ரீதரண்யா, சு. சக்திபிரியா ஆகியொர் சிறப்பாக பேசினார்கள்.
புகுந்த வீடு அணிக்கு தமிழாசிரியர் திருமதி. மனோரஞ்சித மலர் அவா்கள் தலைமையில் மாணவிகள் க. மகாலட்சுமி, வ.ச. ஷெரின் மேஹா ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள்.
.இருதரப்பு வாதமும் சரியாகவே இருந்தது. எனவே, நடுவருக்கு தீர்ப்பு சொல்வது கடினம்தான் என்பது உணர முடிந்தது.
.இருந்தும்கூட இரண்டு அணியின் சாதக, பாதக கருத்துகளை அவ்வப்போது எடுத்துரைத்து சிறப்பாக நடுவர் பணி செய்த Dr. ம. இராஜலட்சுமி அவா்கள் பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்த பெண்மணிகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, ----பிறந்த வீடு என்பது ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம் போன்றது என்றும், புகுந்த வீடு என்பது அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்படும் கட்டிடம் என்றும் இரண்டு வீடுமே பெண்ணின் வாழ்க்கையில் இன்றியமையாதது என நடுவர் தீர்ப்பு வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
விழாவில் அமைப்பின் பொறுப்பாளர்கள் துணைச் செயலாளர் திரு. கண்ணன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. கதிரேசன், பொருளாளர் திரு. சுரேஸ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனா். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசினை அஜந்தா திரு. நாராயணசாமி அவா்கள் வழங்கினார்.
அனைவருக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அமைப்பின் செயலாளர் திரு. க. ரணதிவே அவா்கள் நன்றியுரை தெரிவிக்க நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவடைந்தது.
தமிழாசிரியை திருமதி. மனோரஞ்சித மலர் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தமி்ழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டத் தலைவா் என்கிற முறையில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடன் ஒத்துழைத்த செயலாளர் திரு. க. ரணதிவே உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment