கொரோனா பரவல் அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்த வேண்டுகோளை ஏற்று மாணவர்களுக்கு விடுமுறை வழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்அ அறிக்கை
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில்
மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பினை தமிழகஅரசு அறிவித்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நடைபெறும்வகையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் ல.வருவது வேதனையளிக்கிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று விடுமுறைவழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
0 Comments:
Post a Comment