*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில
1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.
2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு பள்ளிக்கு செல்ல வேண்டும்.
3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.
4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.
சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.
5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.
8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.
9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.
10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.
11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,
குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.
13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.
14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.
15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,
மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.
16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.
17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.
18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.
19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.
20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.
21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.
22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.
23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.
24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.
25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.
26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.
27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.
29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.
31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.
32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.
33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.
34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.
35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,
எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.
38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.
39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.
40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்
0 Comments:
Post a Comment