தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள் 37,358 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 8,386 என தொடக்க,நடுநிலை,உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 45,744 பள்ளிகளில் முறையே அரசுப்பள்ளிகளில் 54,71,544 மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டுவருகிறது.தற்போது கோவியட் 19 என்ற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மாரச் 17 லிருந்து மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.அன்று முதல் சத்துணவு வழங்கப்படவில்லை. ஆகையால் சமையலுக்கு வைக்கப்பட்டிருக்கும் அரிசி,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் இரண்டு மாதங்களாக பள்ளி சத்துணவுக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அரிசி பருப்பு உள்ளிட்டப் பொருட்கள் கெட்டுப்போகவும் வாய்ப்புள்ளது.
ஆகையால் மளிகைப்பொருட்களை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிடவேண்டும். ஏற்கனவே மழலையர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிக அக்கறையோடு செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பள்ளி சத்துணவு மையங்களில் தேங்கிக்கிடக்கும் மளிகைப்பொருட்களை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் குடும்பங்களுக்கு வழங்கி உதவ ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment