மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவரும் நிலையில்
10, ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை தள்ளிவைக்கவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
கொரோனா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாகஉள்ளது. ஆரம்பகட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 10.ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை தள்ளிவைக்கப்பட்டது. இன்று நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப்பரவி 8002 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினம் 500 க்கு குறையாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவது வேதனையளிக்கிறது.
நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்துவருகிறது இந்நிலையில்
மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சற்று முன் பொதுத்தேர்வுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதியும்
ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும்
தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு என்றும்
ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜுன் 1 ந்தேதிக்குள் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றால் மகிழ்ச்சி. ஏனேனில்
9,45 ஆயிரம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே. ஒரு தேர்வுமையத்தில் 500 முதல் 1000 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் படித்துவருபவர்கள் எழுதுவார்கள். அறைக்கு 20 மாணவர்கள் என்றாலும் தேர்வு மையத்திற்கு வரும்போதும் தேர்வு முடித்து திரும்பும் போதும் சமூக இடைவெளி எதிர்பார்ப்பது இயலாதகாரியம்.
காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும்.உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மாதங்களாக விடுப்பிலிருந்து நேரிடையாக தேர்வுஎழுதச்சொல்வது மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வீட்டிற்குள் முடங்கி வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு மேலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவி உலகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் கொரோனா பாதிப்பால் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் உடலும் மனசும் ஒருநிலையில் இல்லை.
இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பம் பெரும்பாலும் 10 க்கு 10 அளவில் உள்ள வீடுகளில் வசித்துவருகிறார்கள். படிப்பதற்கு போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலில் தேர்வு நடந்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். எனவே 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்துச்செய்ய இயலாதபட்சத்தில் கொரோனா முடிவுக்குவந்தப் பிறகே தேர்வு நடத்தவேண்டும்.அதுவும் மாணவர்களுக்கு நினைவூட்டல்,ஆயத்தப்பயிற்சிக்கு இரண்டுவாரம் பள்ளிவைத்தபிறகே தேர்வுவைத்தால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். 11 ஆம் வகுப்பிற்கு பள்ளி அளவில் தேர்ச்சியளித்திடவும் ஆவனசெய்ய வேண்டுகிறேன். மேலும் +2 விடைத்தாள் திருத்தும் மையங்களை அதிகரித்தும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment