தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 10.ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15 நடத்தப்பபடும் அறிவிப்பு வரவேற்புரிக்குரியது என்றாலும் தொடர்ந்து 60 நாட்களுக்கு மேலாக வீட்டிற்குள் முடங்கியிருந்து நேரிடையாக தேர்வை எதிநோக்குவது மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
பொதுத்தேர்வு நடத்துகின்றளவிற்கு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதென்று அரசு உறுதிசெய்யும் பட்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வைக்க ஆவனசெய்யவேண்டும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும்
9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ஊரடங்கிலிருந்து நேரிடையாக தேர்வு எழுதச்சொல்வது ஏற்புடையதல்ல. ஏற்கனவே வீட்டிற்குள் முடங்கி வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கு மேலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்திவருகிறது.மேலும்,
பல பள்ளிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களாகவும் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது.
பள்ளிகளில் கொரோனா முகாம்கள் காலிசெய்யாமல் அப்பள்ளிக்கு தேர்வெழுதவரும் மாணவர்கள் ஒருபுறம் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்களின் முகாம் மறுபுறம் தேர்வறை என்பதால் பயத்துடனே தேர்வு எழுதும் நிலை உருவாகும். மாணவர்-பெற்றோரின் அச்சத்திளைப் போக்க தேர்வெழுதும் பள்ளிகளாக மட்டும் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப்பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சியளித்து தயாரௌ செய்ய குறைந்தபட்சம் இரண்டுவாரம் ஆசிரியர்களோடு மாணவர்கள் இருந்தால் மட்டுமே ஊரடங்கால் உறைந்துபோன உள்ளங்களை உயிர்ப்பிக்கமுடியும்.உத்வேகத்துடன் தேர்வு எழுதமுடியும்.தேர்வுக்கு பாதுகாப்பான வசதிகள் ஏற்படுத்த முடியுமென்றால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டுவாரம் பள்ளி வைத்துவிட்டு தேர்வு நடத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
0 Comments:
Post a Comment