தமிழக தேர்தல் வரலாற்றிலேயே தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகளில் மக்களின் அமோக ஆதரவு பெற்று ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவர்களது அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தாங்களும் தங்கள் அமைச்சர் பெருமக்களும் அனைத்து மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைவருக்குமான மக்களாட்சியை தாங்கள் திறம்பட நடத்திட வேண்டுகிறோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்தாக முத்தான மூன்று திட்டங்களில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயன் படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்கள் பாதுகாப்பினை மேம்படுத்தும் விதமாக சிங்கப்பெண் அதிரடி படை உருவாக்கம், மாவட்டந்தோறும் போதை பொருள் குற்றங்களை தடுக்க போதைப் பொருள்கள் தடுப்பு படை உருவர்க்கம் போன்றவற்றை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனதார வரவேற்கிறோம்.
மேலும் தாங்கள் தேர்தல் கால வாக்குறுதியாக கொடுத்த அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் அன்பை பெற கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் தேர்தல் காலத்தில் உத்தரவாதமாக கொடுத்த காமராஜர் கல்வி உறுதி திட்டம் , வெற்றித் தொழில் முனைவோர் திட்டம், கல்வி உத்தரவாத திட்டம் உள்ளிட்ட அனைத்து தங்களது ஆகச் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி அனைத்து மக்களுக்குமான அரசு என்பதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். நன்றி

0 Comments:
Post a Comment