அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பெருமிதம்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க அருள் சங்கு பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது ஆவது
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்நிலை மேல்நிலைக்கல்வி வரை செயல்படுத்தப்பட்ட வரும் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்து 12 ஆயிரம் ஆக அதிகரித்து உள்ளது ...அரசு மழலையர் பள்ளிகளில் 22 ஆயிரத்து 757 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன ...
காலை உணவு திட்டம் ,நான் முதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம் இலவச சீருடைகள் விலையில்லா பாடப் புத்தகங்கள் இலவச காலணிகள் வண்ண பென்சில்கள் புத்தகப் பைகள் நோட்டுப் புத்தகங்கள் கணித உபகரணப்பெட்டி நில வரைபடம் சுவையுடன் கூடிய மதிய உணவு போன்ற நல்ல அம்சங்களால் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதில் ஒரு அம்சமாக தொடக்கப் பள்ளிகளிலும் கூட ஆங்கில வழி கல்வியை தொடங்கி அரசு செயல்படுத்தி வருவது மாணவர்களுடைய சேர்க்கைக்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது
அதுமட்டுமல்லாமல் இலக்கிய மன்றங்கள் நடத்துதல் சிறார் திரைப்படம் கொடுத்தல் வானவில் மன்றங்கள் வினாடி வினா நடத்துதல் கலைத்திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தக்கூடிய சிறப்பு அம்சங்களாக உள்ளன கலைத் திருவிழாக்களை மாணவர்களை பள்ளி அளவில் வட்டார அளவில் மாநில அளவில் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வது எல்லாம் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுவும் கூட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கூடிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.அரசு பள்ளிகள் தற்போது பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது ஆகவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியை சேர்த்து பயன்பெறுங்கள் .
இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்
Please for your information there is a group of teachers under the head of santhammal stephen asking teachers to look after me and spoiling your reputation I am mercy teachers son Lenin Raja old name jacksonraja it is for your information please stop it thanks
ReplyDeleteMercy teacher worked in TELC primary school Tana Street Purasawalkam Chennai - 7 .
ReplyDelete