மத்திய அரசு ஆனது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக உயர்த்தி வழங்கி உள்ளது .மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதை பின்பற்றி தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தி வழங்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடுமையான நிதி நெருக்கடியில் அரசு இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ,ஊர் புற நூலகர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவார்கள் ,சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பு ஊதியம் மற்றும் மதிப்பு பெறும் பணியாளர்கள் ஆகிய 16 இலட்சம் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை 50 லிருந்து 53 சதவிதமாக உயர்த்தி வழங்கி தீபாவளி பண்டிகையை 16 இலட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகை செய்து இனிப்பான செய்தியை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மக்களின் முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
TNTA
0 Comments:
Post a Comment