தேதி
09-09-2022
பத்திரிகைச் செய்தி
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின்
மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் 09-09-2022 அன்று மாநில தலைவர் க.அருள்சங்கு, மாநில
பொதுச் செயலாளர் வெ.சரவணன் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.
இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தீர்மானங்கள்
1.ஐஐடி,
ஐஐஎம் உயர் தொழில்நுட்ப படிப்புகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட
மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு
அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது
2.செப்டம்பர்
10ல் சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ
வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வெற்றி பெறவும் அதில் வைக்கப்படும் கோரிக்கைகள்
நிறைவேற்றவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனமார்ந்த நல்வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறது
3. புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
4.மாணவர்கள்
நலன் கருதி ஆசிரியர் SGT, BT, PG காலி பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை
எடுக்க வேண்டுகின்றோம். காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் பணியிடங்கள் விரைந்து நிரப்பிட வேண்டும்.
5.உயர்நிலை
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக
பதவி உயர்வு கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டுகின்றோம். தொடக்க கல்வித்துறையில் பல ஆண்டுகளாக பட்டதாரி
ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளிகளில்
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்
6. 01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம்
என்ற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு
வழங்கிட வேண்டும்.
7. 1.1.2022 முதல் வழங்கப்பட
வேண்டிய அகவிலைப்படியையும் அதன் நிலுவைத் தொகையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
8. பல பள்ளிகளில் காலியாக உள்ள தூய்மைப்
பணியாளர்கள் (பெருக்குபவர்கள்
கழிவறை தூய்மை பணியாளர்கள்) பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்
9. உயர்கல்வி
பெற்றதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.
10. கொரோனா
காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம்
திரும்பப்பெறும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
11.அனைத்து
அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த பட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
12. 21 மாதத்திற்கான 7வது ஊதிய குழு
நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்
13. அரசாணை 101
,108 ரத்து செய்து தொடக்க கல்வித் துறை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு உரிய வழிவகை
செய்ய வேண்டுகின்றோம்
14. கல்விப் பணிகளை பெரிதும் பாதிக்கும் EMIS பணிகளை மேற்கொள்ள தனி பணியாளர்களை
நியமிக்க வேண்டும்
15. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து காலமுறை
ஊதியம் வழங்கிட வேண்டும்
இறுதியில் மாநில பொருளாளர்
த.ராமஜெயம் நன்றி கூறினார் இதில் தலைமை நிலைய செயலாளர் சா கோகுலகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் பூ.ஜெகன் மாநில துணைச்செயலாளர் ஸ்ரீதர், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் செல்லத்தாயி,மைதிலி,
கில்டா மாநில செயலாளர்கள் திருவாரூர் சு. ராஜேந்திரன் ,பழ சீனிவாசன் , மாநில
தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் க.ரமேஷ் மற்றும் உயர் மட்ட குழு உறுப்பினர்கள்
சாந்தி ,
ஆரோக்கியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment