TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

SSA 2011-2012ஆம் நிதியாண்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை



SSA 2011-2012ஆம் நிதியாண்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை

 DOWNLOAD


1. அரசாணை (நிலை) எண்.193, பள்ளிக் கல்வித்(வசெ2) துறை, நாள் 02.12.2011 2. அரசாணை (நிலை) எண்.278, பள்ளிக் கல்வி (வசெ2)த் துறை, நாள் 

12.09.2013 3. அரசாணை (நிலை) எண்.91, பள்ளிக் கல்வித் (தொக3(2)), நாள் 21.04.2014 4. அரசாணை (1டி) எண்.180, பள்ளிக் கல்வித்(தொக3(2)) துறை, நாள் 3.6.2015. 5. அரசாணை (1டி) எண்.59 பள்ளிக் கல்வித் (தொக3(2)) துறை, நாள் 

07.03.2016. அரசாணை (1டி) எண்.187, பள்ளிக் கல்வித் (தொ.க3(2)) துறை, நாள் 

15.03.2017. 7. அரசாணை (1டி) எண்.408, பள்ளிக் கல்வித் (தொ.க3(2)) துறை, நாள் 

30.05.2018 8. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் .. எண்.01167/கே4/2017, நாள் 

27.02.2021

ஆணை

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 2011 2012 ஆம் நிதியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் 

ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது

- 2.மேலே இரண்டு முதல் ஏழு வரை படிக்கப்பட்ட அரசாணைகளில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, 2011-2012 ஆம் நிதியாண்டில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 5146 

2012 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு 

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2020 வரை ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன

3.மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர். முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கென ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலே ஏழாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 01.01.2018 முதல் 31.12.2020 வரை வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பு முடிவடைந்ததால் அப்பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார்

4.மேற்கண்ட நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, அரசாணை (நிலை) எண்.193, பள்ளிக் கல்வி (வசெ2)த் துறை நாள் 02.12.2011-ன்படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 -ன்படி, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் நிதியாண்டில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (இணைப்பு 2-ல் உள்ளபடி) (பட்டதாரி ஆசிரியர் - புதிய ஊதிய விகிதம் 36400-115700) மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் (இணைப்பு 1-ல் உள்ளபடி) (இடைநிலை ஆசிரியர் - புதிய ஊதிய விகிதம் 20600 65500) ஆக மொத்தம் 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு புதிய ஊதிய விகிதத்தின்படி 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு (அல்லது) தொடர் நீட்டிப்பு குறித்து நிதித்துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது

5. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்டு பணியிட நீட்டிப்பு வழங்கப்படும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினம் கீழே குறிப்பிட்டுள்ள கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்

2202 பொதுக்கல்வி-01-தொடக்கக் கல்வி -101 அரசு தொடக்கப் பள்ளிகள் -- மாநிலச் செலவினங்கள் -- AD- அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல் - 301 சம்பளங்கள்

(IFHRMS 2202 01101 AD 30100

6. மேற்படி செலவினம் அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியிலிருந்து திரும்பப் பெறப்பட்டு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின்கீழ் வரவு வைக்கப்பட வேண்டும்

0202 கல்வி, போட்டி, விளையாட்டுகள், கலையும் பண்பாடும் 01- பொதுக் கல்வி -101 தொடக்கக் கல்வி - AA- ஏனைய வரவுகள்-221 மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரவுகள் - 01 கல்வி

(IFHRMS 0202 01 101 AA 221 01

7. இவ்வாணை நிதித்துறையின் .சா. எண்.16917/கல்வி-II/2021, நாள் 04.05.2021-ல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது


Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment