TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவிக்கு இந்தியஆட்சிப்பணி அலுவலர் நியமனம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 






பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவிக்கு இந்தியஆட்சிப்பணி அலுவலர் நியமனம். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    புதிய ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் திறமையான,நேர்மையான அதிகாரிகளை நியமிக்கப்பட்டவுடனே சீர்திருத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.தற்போது பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குநர் பணியிடத்தை ஆணையர் பணியிடமாக மாற்றி அப்பதவிக்கு IAS அதிகாரியை நியமித்திருப்பதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

       1824 ஆம் ஆண்டு பொதுக்கல்வியளிப்பதற்காக ஆங்கிலேயரால் போர்டு ஆப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்சன் தொடங்கப்பட்டது.அதன்பிறகு 1854 ல் பள்ளிக்கல்வி இயக்கமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.நெ.து.சுந்தரவடிவேலு போன்ற கல்வியாளர்கள் கல்வித்துறையினை உயர்த்திட அரும்பாடுபட்டார்கள்.அப்போதெல்லாம் சாதி மற்றும் அரசியல்  கல்வித்துறையினை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு மாறாக இயக்குநராகப் பொறுப்பேற்றவர்கள்  மாவட்டக்கல்வி அலுவலர்,முதன்மைக்கல்வி அலுவலர் இணை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்து தொடர்ந்து சாதி,  அரசியல் பின்னணி மற்றும் சில சங்கத்தலைவர்களின் பிடியில்  சிக்கி அவர்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு பள்ளிக்கல்வித்துறையில்  காலத்திற்கேற்ப மேம்படுத்தாமல் போனது வருத்தத்திற் குரியதே. அதிகாரத்தை பயன்படுத்தி முடிவுகள் எடுக்காததால் காலத்தைக்கடத்தியதால் கற்றல் கற்பித்தல் தேக்கநிலை ஏற்பட்டு பல்வேறுவழக்குகள் நீதிமன்றங்களில்  தேங்கியுள்ளது.முறைகேடுகளுக்கும் வழிவகுத்தது. இதனைக் கருத்தில்கொண்டு

அதிகாரமிக்கப்பணி 

 இயக்குநர் பணி  இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (IAS cadre post) வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது  கல்விச்சீர்த்திருத்தம் ஏற்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.


இன்று வரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ் நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது  அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் மறுசீரமைப்பு கொண்டு வர முயலும் சூழலில்,எச்சூழலிலும் காலம் கடத்தாமல் பணிகள் நிறைவேற்றும் பொருட்டு ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ் நாட்டின் தனித்தன்மையும்  எதிர்காலத்தில் முன்மாதிரி மாநிலமாகத்திகழ்ந்து

தனிக்கல்விக்கொள்கை உருவாகும்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையில் தேக்க  நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக திரு. க. நந்தகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்  பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர்  அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் எற்றம்கொண்டுவருவார் மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப்பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி  மீது  பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக,  இயக்குநர் பணியிடத்தில் ஒர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment