TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நிவர் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - மாநில அமைப்பின் சார்பில் இயக்க உறவுகளுக்கு பி.கே.இளமாறன் அன்பு வேண்டுகோள்



 நிவர் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - மாநில அமைப்பின் சார்பில் இயக்க உறவுகளுக்கு பி.கே.இளமாறன் அன்பு வேண்டுகோள்.

  என் இனிய உறவுகளுக்கு வணக்கம்.

பாதுகாப்போடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். 

  அதேபோன்று நம் குழந்தைகளும் ( மாணவச்செல்வங்கள்) குடும்பங்களையும் கண்காணிப்பது நம் கடமையாகும்.

இயற்கை பேரிடர் காலங்களில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சிறப்புக்குரியது.தற்போது நிவர் புயல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாதிப்பபு  தவிர்க்கப்பட்டுள்ளது.

      இருப்பினும் நிவர் புயல் பாதிப்பு எற்படுத்தியுள்ளப் பகுதிகளில் வசிக்கும் நிருவாகிகள்-உறுப்பினர்கள் பாதுகாப்போடு சமூக இடைவெளியினை கடைபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை அவசியத்தேவையான உணவு உடை(புதியது) நாப்கின்,மெழுகுவத்தி  உள்ளிட்டப்பொருட்களை வழங்கி உதவவேண்டுகின்றேன்.அரசுப்பள்ளி மாணவக்குடும்பங்களையும், வெளியில் வர இயலாத நிலையில் உள்ளோருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் உதவ அன்புடன் வேண்டுகிறேன்.

ஏற்கனவே இயற்கை பேரிடர்காலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டதும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் மாணவக்குடும்பங்களுக்கு நேரிடையாக சென்று மளிகைப்பொருட்கள் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.இப்பொழுதும் அதேபோன்று அத்தியவாசியத்

தேவைகளை அறிந்து உதவவேண்டுகிறேன்

    தாங்கள் உதவும் விவரங்களை தகவலுக்காக மாநில அமைப்பிற்கு அனுப்பிவைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment