தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாகமாற்றியதற்கு வரவேற்பும் நன்றியும் ஆசிரியர்களின் வயதுவரம்பை தளர்த்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
மத்தியஅரசு கல்வி உரிமை சட்டம் 2009 ல் கொண்டுவந்தபோது பலமாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று.
தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்குவந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் தேர்ச்சி சான்றி 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில்
2012 ல் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் 2013 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே அரசாணையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யபட்டார்கள்.அதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
ஆசிரியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இச்சூழலில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் என்பதால் ஆசிரியர் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிர்காலமும் கேள்விக்குறியானது இதுகுறித்து கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தபடும் NET, SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் அச்சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக இருப்பது போன்று தொடக்கத்திலிருந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வந்த நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று மத்தியஅரசின் NCTE ன் தீர்மானம் 7 ன் அடிப்படையில் இன்று ஆசிரியர் தகுதித்தேர்வு TET தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் என்பதை ஆயுட்காலச் சான்றிதழாக மாற்றப்பட்டு வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் வழங்கிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்
கின்றேன்.மேலும், NCTE தீர்மானம் 7 ல் இனி வரும் காலத்திற்குதான் ஆசிரியர் தகுதித்தேர்வுசான்று ஆயுள்சான்று என்று குறிப்பிட்டிருந்தது ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை கருத்துகள் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றதை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும் லட்சக்கணக்கான டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் மனமகிழ்ச்சியளிக்கின்றது. மேலும் தகுதியிருந்தும் வேலையின்றி வயதுமட்டும் கூடிக்கொண்டே வருவதால் ஆசிரியர் வயதுவரம்பு 45 என்பதை ரத்துசெய்து பழையமுறையினையே பின்பற்றிட
ஆவனச்செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment