12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்க மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தமிழ்நாட்டில் கொரொனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக் காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நாளை 19.01.2021 பொதுத்தேர்வெழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.பாதுகாப்பு நடைமுறைகளை சரியானமுறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய 4 IAS அதிகாரிகள் தலைமையில் 19 இயக்குநர்கள் துணை இயக்குநர்கள் மேற்பார்வையில் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் இன்றுமுதல் பள்ளிகளை ஆய்வுசெய்துவருவது நம்பிக்கையளிக்கிறது. மேலும் இதுவரை முதல் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் சமூகநலத்துறை மூலம் மதியஉணவாக முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டுவருகிறது. இதனை 12 ஆம் வகுப்புவரை நீட்டிக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
தற்போது கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மாணவர்களின் நலன்கருதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கவேண்டும் அதனை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் முதற்கட்டமாகப் பொதுத்தேர்வினை எதிர்நோக்கி நாளை பள்ளிக்குவரும் சுமார் 8.75 லட்சம் மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கி உதவிடும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
0 Comments:
Post a Comment