Pages

Pages

Tuesday, June 22, 2021

மாணவர்‌ சேர்க்கை இராணிப்பேட்டை மாவட்டம்‌ - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌- பள்ளிக்கு வருகை புரிதல்‌ சார்பாக RANIPET CEO INSTRUCTION

 


மாணவர்‌ சேர்க்கை இராணிப்பேட்டை மாவட்டம்‌ - அரசுப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள்‌- பள்ளிக்கு வருகை புரிதல்‌ சார்பாக RANIPET CEO INSTRUCTION.காலதாமதமாக வருகை புரியும்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்‌ என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


ந.க.எண்‌. 1945/ஆ2/2021 நாள்‌.22.06.2021

பொருள்‌ : மாணவர்‌ சேர்க்கை இராணிப்பேட்டை மாவட்டம்‌ - அரசுப்பள்ளி

தலைமை ஆசிரியர்கள்‌- பள்ளிக்கு வருகை புரிதல்‌ சார்பாக.


பார்வை : முதன்மைக்கல்வி அலுவலர்‌ அவர்கள்‌ பள்ளிகள்‌ பார்வை

நாள்‌.21.06.2021.


இராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பள்ளிகளில்‌ 2021-2022-ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ இந்நிலையில்‌, பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ பள்ளிக்கு காலை 9.00 மணி முதல்‌ 9.15-க்குள்‌ வருகைபுரிய வேண்டும்‌. காலதாமதமாக வருகை புரிந்து சேர்க்கைக்கு வரும்‌ மாணவ /மாணவிகளை காத்திருக்க வைத்தல்‌ கூடாது. காலதாமதமாக வருவதை முற்றிலும்‌ தவிர்த்து காலை 9.00 மணி முதல்‌ 9.15 மணிக்குள்‌ பள்ளியில்‌ தலைமை ஆசிரியர்கள்‌ இருப்பதை உறுதிபடுத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ காலதாமதமாக வருகை புரியும்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்‌ என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


 



முதன்மைக்கல்வி அலுவலர்த்‌ 


இராணிப்பேட்டை.


பெறுநர்‌ 


1. அனைத்துவகை தலைமை ஆசிரியர்கள்‌ இராணிப்பேட்டை மாவட்டம்‌.

மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ இராணிப்பேட்டை / அரக்கோணம்‌. 

 வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ இராணிப்பேட்டை மாவட்டம்‌.


No comments:

Post a Comment