Pages

Pages

Wednesday, June 16, 2021

2018-2019 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்த்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவழங்கக்கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை





 2018-2019 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்த்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவழங்கக்கோரி மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2018-2019 ஆண்டிற்கான 2144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான   நேரடி நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு 12.06.2019. அன்று அறிவிக்கப்பட்டு 28.09.2019,  29.09.2019 ஆகிய நாள்களில் தேர்வு நடத்தப்பட்டன. அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்து சரிபார்த்தது. பின்பு தேர்ச்சி பெற்றோருக்கானப் பட்டியலை 20.11.2019 நாள் அன்று சில பாடங்களுக்கும்,  02.01.2020 நாளன்று சில பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.  அவர்களுக்குப் பணி ஆணை பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டது.  அதில் அடுத்துள்ளள நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது பள்ளிக்கல்வித் துறையை அணுகியபோது ஏற்கனவே தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை ஆசிரியர்கள் இருப்பதால்  2019-2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களை நிரப்பிட இரண்டாம் பட்டியல் கேட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்வதாகவும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பதில் கூறினார். அந்நாளிலிருந்து   1:2. அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசிரியர்களை வைத்து நிரப்பப் பட வேண்டும்  என்று தொடர்ந்து கடந்த 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து ஒன்றரை வருடமாக கடந்த ஆட்சியாளர்களிடமும், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் , பள்ளிக்கல்விச் செயலாளர்களிடமும் கடிதம் வாயிலாகவும்,  நேரடியாகவும் வலியுறுத்தித்தினோம்.அன்றைய கல்வி அமைச்சரும் கண்டிப்பாக உங்களுக்கான பணியிடம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் . ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ளள 1500 முதுகலை ஆசிரியர்களுக்கு இறுதிவரை இரண்டாவது பட்டியல்  வெளியிடாதது மனஉளைச்சலுக்குள்ளாக்கியது.

                 இந்நிலையில் கடந்த ஆட்சிகாலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்   11.02.2021 அன்று  2020 -2021 ஆண்டிற்கான. ‘2098’ பணியிடங்களுக்கான அறிவிப்பை அவசரஅவசரமாக வெளியிட்டுள்ளது.         2019-2020 கல்வி ஆண்டிற்கான பணியிடங்கள் பற்றி முறையாக தகவல் இல்லாதது ஆசிரியர் கனவை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆகையால்          2019-2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களுக்கு              சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள முதுகலை ஆசிரியர்களை வைத்துத் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.


 மேலும்,  ஆசிரியர்கள்  கொரானா நோய்த் தொற்றுக் காலங்களில்  வாழ்வாதாரத்தை இழந்தும், தனியார்ப் பள்ளிகளில் பணியிலிருந்து நீக்கப் பட்டும்,  எந்தவொரு பொருளாதாரமும் இன்றி வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு மிகவும் துன்பப் பட்டுள்ளார்கள். இதனால் பெரும் மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருக்கும்  சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு வாழ்வாத.தாரம் காக்கக் கருணை உள்ளத்துடன் பரிசீலித்து பணிவழங்க ஆவனச்செய்யுமாறு மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

98845 86716

No comments:

Post a Comment