பெறுநர்
மாண்புமிகு.முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச்செயலகம்
சென்னை-09.
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து முன்களப்பணியாளர் போன்று மக்கள் சேவையாற்றும் மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொண்டுவரும் தமிழகஅரசின் செயல்பாடுகள் சிறப்புக்குரியது. கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்திவரும் நிலையில் கொரோனா சங்கிலியினை துண்டித்து மக்களைக் காப்பாற்ற பதினைந்து நாட்கள் ஊரடங்கு அறிவித்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.மேலும் ஊரடங்கினை முழுமையாகக்கடைபிடிப்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்தது தமிழக அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழகஅரசின் சேயல்பாடுகளை நேரிடையாக மக்களுக்கு எடுத்துச்செல்வது ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் என்றால் அதுமிகையாகாது. அதனடிப்படையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம் அரசுக்கு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் உறுதுணையாக இருந்துவருகிறார்கள். தற்போது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நிருவாகக்குழுவில் எடுத்து முடிவின்படி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் அரசுக்கு உதவியாகச்செயல்பட்டு ஆசிரியர் ஒருநாள் ஊதியத்தை தமிழகஅரசின் கொரோனா நிவாரணநிதிக்கு வழங்கிடமுடிவெடுத்துள்ளோம். இதனை தமிழக அரசு ஏற்று கடந்தகாலவழிமுறைகளைப் பின்பற்றி சம்பளத்தில் ஒருநாள் ஊதியத்தினை பிடித்தம் செய்வதற்கு ஏற்ப அரசாணை வெளியிடும்படி மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716.
No comments:
Post a Comment