Pages

Pages

Monday, March 22, 2021

கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

 



கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு மாணவர்கள் நலன்கருதி +2 ஆம் வகுப்புக்கும் விடுமுறையளித்து ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பரிசீலிக்கத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை 

      கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தது.  மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில்

     மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு  9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சியளித்துப் பிறகு மறுஉத்தரவு வரும்வரை விடுமுறையளிக்கப்பட்டது.தொடர்ந்து  கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் விடுமுறையளிக்கப்பட்டது.இந்நிலையில்  தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில்  மாணவர்களுக்கு கொரோனா தொற்று நாளுக்குநாள் உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் ல.வருவது வேதனையளிக்கிறது. தற்போது கொரோனா பரவல் நாடுமுழுதும் அதிகரித்துவரும் நிலையில்  ஒரே நாளில் 40ஆயிரத்தையும் தாண்டி குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1385 பேர்கள் கொரோனா பாதித்து 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கின்றது.மேலும் சுகாதாரத்துறைச் செயலாளர் தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனால் பொதுத்தேர்வென்பதால் பன்னிரெண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகளை தினந்தோறும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றோம் என பெற்றோர்கள் கவலையோடு தெரிவிக்கிறார்கள். எனவே பெற்றோர்களின் அச்சத்தைப்போக்கவும் மாணவர்களின் நலன்கருதி கல்லூரியைத் தொடர்ந்து +2  மாணவர்களுக்கும்  விடுமுறை வழங்கி இந்தக் கல்வியாண்டில் பொதுத்தேர்வினை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப் பரிசீலிக்க  ஆவனசெய்யுமாறு தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

 *பி.கே.இளமாறன்* 

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

98845 86716

No comments:

Post a Comment