Pages

Pages

Thursday, March 18, 2021

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 100 % தபால் வாக்குகளை உறுதிசெய்யவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 


ஆசிரியர்-அரசு ஊழியர்களின் 100 % தபால் வாக்குகளை உறுதிசெய்யவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

  தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தால் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு காலதாமதமின்றி தபால் வாக்குகள் அளிக்கும் வகையில் உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஐம்பதாயிரத் திற்கும் மேற்பட்ட ஆசிரியர்-அரசுஊழியர்கள் வாக்களிக்க முடியாமல்போனது இம்முறை அனைவரும் வாக்களிப்பதை உறுதிசெய்ய பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலே தபால் வாக்களிக்க வாய்ப்புவழங்கிடவேண்டும். மேலும் ஆசிரியர்கள் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்களும் பள்ளிக்குவருவதால் தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை களில் வழங்குவதை தவிர்க்கவேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் வாக்குப்பதிவு முன் நாளே பணிக்குச்சென்று மறுநாள் இரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும்வரை பணியில் உள்ளதால் தேர்தல் ஆணையமே உணவு ஏற்பாடும் மற்றும் கொரொனா பாதுகாப்பு உபகரணங்கள் கையுறை,முககவசம் உள்ளிட்டவைகளை வழங்கி உதவிடவேண்டும்.? தேர்தல் பணியில் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களை 10 கிலோ மீட்டருக்குள் பணி வழங்கிடவேண்டும். 16 வது சட்டமன்றத் தேர்தலில் முழு ஈடுபாடுடன் பணிபுரியக் காத்திருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நிறைவேற்றித்தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். 98845 86716

No comments:

Post a Comment