TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA)
FOUNDER P.K ILAMARAN
Pages
▼
Pages
▼
Wednesday, February 17, 2021
தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் (16-02-2021 )
அனைத்துத்தமிழ் உறவுகளுக்கும் இனிய வணக்கம்🙏
தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் (16-02-2021 )இன்று மாலை ராயபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இக்கூட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம் நடத்துவது தொடர்பாகவும் பட்டிமன்றம் எங்கு எப்போது நடத்தப்பட வேண்டும் என்றும் பங்கேற்கும் பேச்சாளர்கள் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு தமிழ் சங்கம் திருப்பூர் மாவட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் அவர்கள் முன்னிலை வகித்தார் மாவட்ட இணைச்செயலாளர் திரு கண்ணன் அவர்கள் தலைமை வகித்துப் பேசினார் மாவட்டச் செயலாளர் திரு ரணதிவே அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மாவட்டப் பொருளாளர் திரு. சுரேஷ் அவர்களும் மாவட்டச் செய்தி தொடர்பாளர் திரு முனியாண்டி அவர்களும் தங்கள் கருத்துக்களை பரிமாறினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு புருஷோத்தமன் அவர்கள் மேலான ஆலோசனைகளை வழங்கினார் மாவட்டத் தலைவர் திரு முத்துபாரதி அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்🙏.
No comments:
Post a Comment