55 வயதுக்கு மேற்பட்டோரை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதன் ஆயத்தப்பணிகளௌ தொடங்கியுள்ளன. ஜனநாயகத்தினை நிலைநாட்டிட தேர்தல் ஜனநாயகமுறையில் நடந்திட ஆசிரியர் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் மிகச்சிறப்பாக தங்கள் கடமைகளை செய்துவருகின்றோம். தேர்தல் பணி நாட்டின் அத்தியவாசியப்பணியில் மிகமுக்கியமானது.
மேலும் BLO DLO பணிகளை ஆண்டு முழுதும் ஆசிரியர்கள் செய்துவருகிறார்கள்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதால் அப்பணிக்காக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பட்டியல் பெறபட்டுவருகிறது. இப்பணியினை செய்ய நாங்கள் தயாரக உள்ளோம்.
ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டோர், இதயநோயால் பாதிக்கப்பட்டோர், சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், கர்ப்பினி பெண் ஊழியர்களை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.மேலும்,தற்போது பணியிலுள்ள அனைவரின் பட்டியலும் கேட்டுப்பெறுவதால் அவர்களுக்கு பணி ஒதுக்கபட்டுவிடுவதால் கடைசி நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்க பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி மனஉளைச்சலை உண்டாக்குகின்றது.
ஆகையால் பட்டியல் பெறும்போதே 55 வயதுக்கு மெற்பட்டோர் உடல்நலம் குன்றியோரை விடுவித்து பட்டியல் தயாரிக்கவேண்டுகிறேன். இதுகுறித்து முதற்கட்டமாக திங்கட்கிழமை தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.மேலும் 07.01.2020 அன்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில நிருவாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
No comments:
Post a Comment